(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 2394 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 14087 பொலிஸார் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு , இன்று அதிகாலை மூன்று மணிவரை இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது தேடப்பட்டுவந்த பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதற்கமைய பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 1466 பேரும் , பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 191 பேரும் , சந்தேகத்திற்கிடமான 737 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் 2394 பேரையும் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியுள்ள பொலிஸார் , தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.