(செய்திப்பிரிவு)

தேசப்பற்று கொண்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் கவலையளிப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால ,பொதுத்தேர்தலில் சின்னம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபாலாவின் இலலத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசப்பற்றாளர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருணிக்கா சபையில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் மிகவும் கவலைக்குரியது .

நான் ஹிருனிகாவின் தந்தையாருடன் சேவையாற்றிய ஒருவன் .  அவர் இந்த நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் நன்மைகள் பற்றி பெரிதும் அறிந்துள்ளேன். 

அவரின் வழியில் வந்தவர் இவ்வாறான வார்த்தை பிரயோகித்திருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியளித்திருந்தது. 

லக்ஷ்மன் பிரேமச்சந்திர அக்காலப்பகுதியில் இடதுசாரி கொள்கைளுடன் இணைந்து எம்மடன் செயற்பட்டார். பொது தேர்தலில்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சகோதர கட்சிகள் 14 உடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இது ஜனாதிபதி தேர்தல் அல்ல  பொது தேர்தல். ஜனதிபதி தேர்தல் போன்று தனியான ஒரு சின்னம் வழங்கப்படுவதில்லை . 

பொது தேர்தல்களில் நாங்கள் 15 மாவட்டங்களில் வெற்றிலை சின்னத்துடன் போட்டியிட்டிருந்தோம் 7 மாவட்டங்களில் கை சின்னத்துடன் போட்டியிட்டிருந்தோம். சின்னம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது. 

1994 ஆம் ஆண்டு கதிரை சின்னத்தில் பொது தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம். நாங்கள் அணைத்து கட்சிகளுடன் ஒன்றிணைத்து செயற்படுவோமே தவிர சின்னம் தொடர்பில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம் என அவர் தெரிவித்தார்.