தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் இறந்த 41 வயதுடைய பெண் தவறான காதல் உறவில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவித்தமையாலே, 54 வயதுடைய நபர் கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட  நபருடன் சம்பவ இடத்தில் இருந்த மேலும் ஒரு பெண்ணும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கைக்குண்டு தாக்குதலில் தவறான காதல் உறவில் எதிர்ப்புத் தெரிவித்த பெண் மற்றும்  9 வயது சிறுமி  காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையிலேயே குறித்த சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.