ஜேர்மனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது பாடன்-வுயர்ட்டம்பெர்க் மாகாணத்தில் உள்ள ரோட்  ஆம் சீ நகரிலேயே இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட காரணங்களினாலேயே குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.