அங்கவீனமுற்ற முப்படையினருக்கு சலுகை கட்டணங்களின் அடிப்படையில் இன்று முதல் புகையிர பயணங்களை மேற்கொள்ள முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, போரினால் அங்கவீனமுற்றவர்களுக்கு  வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை காண்பிப்பதன் மூலம் விசேட கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறித்த புகையிரத கடவுச்சீட்டானது நூற்றுக்கு 50 வீத தள்ளுபடியுடன் வழங்கப்படுமெனவும் புகையிரத போக்குவரத்துச் சபை அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் அங்கவீனமுற்ற முப்படையினருக்கு குறித்த சலுகையானது வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.