கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயத்தை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சஜித்

Published By: R. Kalaichelvan

24 Jan, 2020 | 05:14 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீன புத்தாண்டு காலம் ஆரம்பமாகவுள்ளதால் அந்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமான இலங்கைக்கு வருகை தருவார்கள் ஆகவே  சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் சபையில் எச்சரிக்கை விடுத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து, சீனாவில் சில நகர் பகுதிகளில் தீவிரமாக பரவிவரும் கொரோனே வைரஸ் தொடர்பாக அறிவித்தல் விடுத்த போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். 

எமது நாட்டில் சில காலத்திற்கு முன்னர் சார்ஸ் மற்றும் மேர்ஸ் என்ற வைரஸ் பரவியது. இந்நிலையில் தற்போது கொரோனா என்ற வைரஸ் காரணமாக சீனாவில் இரண்டு நகரங்கள் முற்றாக முடங்கியுள்ளது.

அது இப்போது ஆபாத்தான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது இப்போது ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வரையில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம்  25ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரையில் சீன  புத்தாண்டு காலமும் ஆரம்பிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் எமது நாட்டில் 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி புள்ளி விபரங்களுக்கமைய சீனாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளது.

70 ஆயிரம் பேர் வரையில் வருகை தந்துள்ளனர். தற்போது சீனாவில் குறித்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீன புத்தாண்டு காலத்தையொட்டியதாக சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு பெருமளவுக்கு வரலாம்.

இதனால் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17