சீனாவில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதை காண்பிப்பதாக தெரிவிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வுகான் நகரிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் என சொல்லப்படும் பல வீடியோக்களில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதையும்,மருத்துவ பணியாளர்கள் அவர்களிற்கு சிகிச்சை அளிப்பதையும் காணமுடிகின்றது.

வீதியில் நிற்கும் மக்கள் திடீர் என நிலத்தில் வீழ்வதையும் முகக்கவசம் அணிந்தவர்கள் அவர்களை காப்பாற்ற விரைவதையும் அந்த வீடியோக்கள் காண்பித்துள்ளன.

வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த  வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வங்கி போன்று தோற்றமளிக்கும் ஒரு பகுதியில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதையும் முகக்கவசம் அணிந்தவர்கள் அவரை பார்வையிடுவதையும் காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

சிறிது நேரத்தில் வெள்ளை கவசஉடையணிந்த ஒருவர் வீழ்ந்து கிடப்பவரை நோக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

வணிக வளாகத்தில் நபர் ஒருவரிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும்,உடற்பயிற்சி கூடத்தில்ஒருவர் வீழ்ந்து கிடப்பதையும்காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன

வீதியில் விழுந்து சுயநினைவற்று காணப்படும் இருவரிற்கு அருகில் அம்புலன்ஸ் செல்வதையும், வீதியில் முகக்கவசத்துடன் நிற்கும் ஒருவர்  என கீழே வீழ்வதையும் காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோக்கள் படங்களை உறுதிப்படுத்தப்படாத முடியாத நிலை காணப்படுகின்றது என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.