திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன்  ஒருவர் சிறைக்குச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென் என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு குறித்த பெண் ஜென்னிடம் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு சென் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காதலி விடுவதாக இல்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகிலிருந்த நடன ஸ்டூடியோவுக்குச் சென்று அங்கிருந்த மதிப்புள்ள ஒலிபெருக்கியைத் திருடியுள்ளார்.

இதையடுத்து திருடிய குற்றச்சாட்டில் அவரைப் பொலிஸார் கைது செய்தனர். மகிழ்ச்சியாகக் கைதான சென், காதலியிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிச்சயம் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து விடுவார்கள் என்று தெரியும் எனவும் சிரித்துக் கொண்டே அவர் தெரிவித்துள்ளார்.