சீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்தே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் அவசரகாலநிரலை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகநாடுகளில் பரவியுள்ள குறித்த கொரோனா வைரஸானது தற்போது கொங்கொங், மக்காவு, தாய்வான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான்,வியட்நாம்,சிங்கபூர்,சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவின் 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.