சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் சட்டவிரோத ஆயுத விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரும் பயணித்தார் - வெளியாகியது புதிய தகவல்

24 Jan, 2020 | 03:42 PM
image

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட  உக்ரைன் விமானத்தில், ஐநாவின் தடைகளை மீறி லிபியாவிற்கு ஆயுத விற்பனையில் ஈடுபட்ட நிறுவனமொன்றின் தலைவரான பெண்ணொருவர்  பயணித்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்  என ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒலேனா மலகோவ 38 என்ற பெண்மணியும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டவேளை பலியாகியுள்ளார்.

ஈரானால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது வரிசையில் அவரிற்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது.

குறிப்பிட்ட விமானத்திலிருந்த இரண்டு உக்ரைன் பயணிகளில் இவரும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலகோவா உக்ரைனிலிருந்து செயற்படும் ஸ்கை ஏவியா டிரான்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் சரக்கு விமானமொன்று 2019 இல் லிபியாவில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலில் அழிக்கப்பட்டது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மிஸ்ரட்டா பகுதியில் குறிப்பிட்ட விமானம் தரையிறங்கியவேளை கலிபியா ஹாவ்ட்டரின் அமைப்பை சேர்ந்தவர்களின் தாக்குதலிற்கு இந்த விமானம் இலக்கானது.

அவ்வேளை துருக்கியிலிருந்து மனிதாபிமான பொருட்களை கொண்டு சென்ற விமானமே தாக்கப்பட்டதாக ஒலேனா மலகோவின்  நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும் ஆயுதங்களை கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த விமானத்தை தாக்கியதாக லிபியாவின் தேசிய இராணுவம் என்ற அமைப்புஅறிவித்திருந்தது.

இதேவேளை கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ஐநா குறிப்பிட்ட விமானம் அதிகளவு இராணுபொருட்களுடன் காணப்பட்டது, குறிப்பிட்ட விமானத்திற்குள் ஆளில்லா விமானத்தின் பாகங்கள் காணப்படடன என குற்றம்சாட்டியிருந்தது.

குறிப்பிட்ட பெண் ஈரானிற்கு என்ன நோக்கத்திற்காக விஜயம் மேற்கொண்டார் என்பது சர்வதேச அளவில் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13