ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் கூட்டணிப் படைகளை வெளியேறுமாறு கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஈரானின் குட்ஸ் படைத் தளபதி காஷிம் சொலைமானி மற்றும் ஈராக்கில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதன் பின்னர் அமெரிக்க இராணுவப் படைகளை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சட்டமூலமும் ஈராக் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

எனினும் வொஷிங்டன் ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை மறுத்து வந்தது. 

இந் நிலையிலேயே அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஈராக் ஷியா மதகுரு முக்தாதா அல் சதர் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் பக்தாத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.