நுரைச்சோலை அனல் மின் உற்றபத்தி நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் கரவலப்பிட்டியிலும் எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.