இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டது.  

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது .

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான பல்கலைக் கழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நோர்வேவிலுள்ள பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் இவ் ஆய்வை மேற்கொள்ளக் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட வளாகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலின்  யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான கைகோர்ப்பாக இன்றைய திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இதற்குக் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உதவிகளை வழங்குகின்றது. 

இந்த புதிய மிதக்கும் சூரிய மின் ஆலை ரூபவ் நோர்வே கொண்டுள்ள வெளிக்கள மற்றும் கடல்சார் தொழிற்துறைகளின் அனுபவங்களின் பிரகாரம் அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன் . இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள முதலாவது புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்கல் பங்காக அமைந்துள்ளதுடன் இதனூடாக 42 கிலோ வாற்று மின்சாரத்தைப் பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும்.

மிதக்கும் மின் ஆலை போன்ற தூய வலு மூலங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பெற்றுக் கொள்வது மக்களின் வாழ்க்கையில் பெருமளவு  தாக்கத்தை ஏற்படுத்தும். நிலக்கரியில் இயங்கும் மின் பிறப்பாக்கல் ஆலைகள் உள்நாட்டு வளியின் தரத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காபன் வெளியீடும் காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றன. 

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இளவயது உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் காரணிகளில்  வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளிலிருந்து வெளிவரும் மாசுகளும் பங்களிப்பு செலுத்துகின்றன.

இந்த விடயங்களின் பிரகாரம்  படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறுவதற்குச் சூரிய சக்தி முக்கிய பங்களிப்பை வழங்கும். இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் போன்றே  உலகின் அரைப்பங்கு சனத்தொகையினர் கரையோர பகுதிகளில் வசிக்கின்றனர். 

எனவே மிதக்கும் சூரிய மின் ஆலைகளினால் தூய வலுவைப் பிறப்பித்து ரூபவ் நுகரக்கூடியதாக இருக்கும். வலுபிறப்பாக்கலுக்கு புதிய வாய்ப்புகள் பலதை உருவாக்கக்கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளன. 

நீண்ட கால அடிப்படையில் ரூபவ் குளங்கள் மற்றும் திறந்த சமுத்திரங்களில் மிதக்கும் சூரிய வலுப் பண்ணைகளை நிறுவக்கூடிய சாத்தியம் ஏற்படும்.  இவற்றைப் பயன்படுத்தி நாம் சரியாகச் செயலாற்றினால் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும்  நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ரூபவ் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவிருக்கும்.

 இலங்கையை பொறுத்தமட்டில் நீண்ட கால வறட்சி அல்லது தொடர் மழைவீழ்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்காது. இந்த மிதக்கும் சூரிய மின் ஆலை ரூபவ் இலங்கையில் நிறுவப்படவுள்ள பல நிலைபேறான மின் ஆலைகளில் முதலாவதாக அமைந்துள்ளது எனக் கருதுகின்றேன். 

 இறுதியாக நோர்வே மற்றும் இலங்கை தரப்பிலிருந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறுவுவதற்குப் பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். 

இந்த ஒன்றிணைவினூடாக நீண்ட காலமாகப் பேணப்படும் இலங்கை மற்றும் நோர்வே இடையிலான உறவுக்கு மேலும் பிரகாசத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கும் என  அவர் தெரிவித்துள்ளார்.