கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் தாக்கங்களை  தணிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் நலம் குறித்து மிகவும் அவதானத்துடன் இருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்புகளை  பலப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இவ்வாறு வைரஸ் பரவுவது குறித்து விமான நிலையத்தின் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.