இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து  அணி 203 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அக்லந்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய  அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை குவித்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 30 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், கிரேண்ஹோம் டக்கவுட்டுடனும், டீம் சைபெர்ட் ஒரு ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, ரோஸ் டெய்ல் 27 பந்துகளில் 3 சக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடனும், மிட்செல் சாண்டனர் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பும்ரா, சர்துல் தாகூர், சஹால், சிவம் டூப், ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.