லிபியாவில் இடம்பபெற்றுவரும் உள்நாட்டு போரினால் அந்நாட்டின் தலைநகர் திரிபோலியிலுள்ள விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

திரிபோலியிலுள்ள மிடிகா விமனாநிலையத்தில் நேற்று முன்தினம் குறித்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

‘கிராட்’ ரககத்தைச் சோ்ந்த 6 ஏவுகணைகள் குறித்த விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்தோடு அந்த விமான நிலையத்தில் பல மணி நேரத்துக்கு விமானப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்டு வந்த அரச படையினருக்கும், முன்னாள் இராணுவத் தளபதி காலிஃபா ஹஃப்தார் தலைமையிலான படையினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, 9 நாட்களுக்கு முன்னா் குறித்த விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த கடாபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிழ்த்தனா்.

எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவங்கள் பல் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் லிபியாவில், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற பிரதமா் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரச  படையினருக்கும், காலிஃபா ஹஃப்தார் படையினருக்கும் இடையே அண்மைக் காலமாக முறுகல் நிலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.