முதன்மை தமிழ் கட்­சி­யி­ட­மி­ருந்து எனக்கு ஆத­ரவு கிடைக்­கின்­றதோ இல்­லையோ  அதைப் பொருட்­ப­டுத்­தாமல் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை  பிர­தேச ரீதி­யான   எந்­தப் ­பா­கு­பா­டு­மில்­லாமல்  அபி­வி­ருத்தி செய்­வதே எனது நோக்கம் என்று ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்­கைக்­கான  ஐ.நா.வின்  வதி­விட பிர­தி­நிதி  திரு­மதி  ஹானா சிங்­கரை  சந்­தித்து    பேசி­ய­போதே   ஜனா­தி­பதி  இந்த விட­யத்தை    சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.  இனங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யையும் இயல்பு நிலை­யையும் வளர்ப்­ப­தற்கு  எவ்­வ­கை­யான முன்­னு­ரி­மை­யினை அர­சாங்கம்  வழங்கி வரு­கின்­றது  என்று  ஐ.நா. வதி­வி­டப்­ பி­ர­தி­நிதி கேள்வி எழுப்­பி­ய­போது அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு  கூறி­யி­ருக்­கின்றார்.

இலங்கை போன்ற  தீவாக உள்ள நாட்டில்  மீன்­வளம்  மற்றும்  நீரியல் வள அமைச்­சா­னது   மிகவும்   பிர­தா­ன­மான ஓர்  அர­சாங்க அல­காகும். ஒன்­பது முறை விடு­த­லைப்­பு­லி­களால் இலக்­கு­வைக்­கப்­பட்ட   டக்ளஸ் தேவா­னந்­தாவை அதற்கு பொறுப்­பான அமைச்­ச­ராக    நான் நிய­மித்­துள்ளேன். இந்த அமைச்சு  வடக்கு, கிழக்­கிற்கு மட்­டு­மா­ன­தல்ல. இது தெற்­கிற்கும் நாடு முழு­வ­துக்­கு­மான   மிகவும்  இன்­றி­ய­மை­யாத ஒரு தொழிற்­றுறை அமைச்­சாகும். இந்த அமைச்­சா­னது  தனது பணியை நாடு முழு­வதும் சம­மாக வழங்கும்  என்றும்  ஜனா­தி­பதி  இந்த சந்­திப்பில்  எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இத­னை­விட தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில்   அவர்கள்  பொலி­ஸா­ருடன்  தொடர்­பா­டலில் ஈடு­ப­டும்­போது   எதிர்­கொள்ளும் முக்­கிய பிரச்­சி­னை­களில்   ஒன்று மொழிப்­பி­ரச்­சி­னை­யாகும்.   எனவே,  இதற்­கான  உட­ன­டித்­தீர்­வாக   தமிழ் பகு­தி­க­ளி­ல் 3000  பொலி­ஸாரை பணிக்கு அமர்த்­தவும்   பொலிஸ்  நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளாக  தமி­ழர்­களை நிய­மிக்­கவும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும்    காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கும் தீர்வு காண முயல்­வ­தா­கவும் ஜனா­தி­பதி இந்த சந்­திப்பில்   தனது நிலைப்­பாட்டை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐ.நா. வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யுடன் இடம்­பெற்ற   சந்­திப்பில்  இனங்­க­ளுக்­கி­டையே  நல்­லி­ணக்­கத்­தையும்   ஐக்­கி­யத்­தையும்  ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான  தனது திட்­டங்கள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­யுள்­ள­தாக தெரி­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்   பெரும்­பான்­மை­யான சிறு­பான்­மை­யின மக்கள்  கோத்­தாபய ராஜ­­பக்ஷ­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை.  பெரும்­பான்­மை­யின சிங்­கள மக்­களின் பெரும்­பான்­மை­யானோர் அவ­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதன் மூல­மா­கவே அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார்.  ஜனா­தி­ப­தி­யாக அவர்  பத­விப்­பி­ர­மாணம் செய்­த­போது  இந்த விட­யத்தை  நேர­டி­யா­கவே  அவர் சுட்­டிக்­காட்­டி­ய­துடன்  எதிர்­காலத்தில்   தனது வேலைத்­திட்­டங்­க­ளுக்கு  தமிழ், முஸ்லிம் மக்கள்  ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும்  வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

தமிழ் மக்கள் தமது  அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும்  அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சியல் தீர்வு காண­வேண்­டி­யதன்  அவ­சியம்   குறித்து  அக்­கறை கொண்­டுள்­ளனர்.  ஆனால்,   தமிழ் மக்­களின் இந்த எதிர்­பார்ப்பு விட­யத்தில்  ஜனா­தி­பதி கோத்­த­பா­யவின்  எண்­ணக்­கரு முரண்­பட்­ட­தா­கவே   காணப்­ப­டு­கின்­றது.   தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அபி­வி­ருத்­தியின் மூலமே தீர்வைக் காண முடியும் என்ற எண்­ணப்­பாட்டை ஜனா­தி­பதி கொண்­டி­ருக்­கின்றார். அதன் மூலமே  இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை  ஏற்­ப­டுத்­தலாம் என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக உள்­ளது.

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று சில­வா­ரங்­களில் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­க­ளையும்  ஊடக நிறு­வ­னங்­களின்  பிர­தா­னி­க­ளையும்  ஜனா­தி­பதி   சந்­தித்து பேசி­யி­ருந்தார்.  இந்த சந்­திப்­பின்­போது  அதி­கா­ரப்­பர­வ­லாக்கல் தொடர்­பிலோ சமஷ்டி குறித்தோ பேசு­வதில் எந்­தப்­ப­யனும் இல்லை என்றும்  பெரும்­பான்­மை­யின மக்­களின் எதிர்ப்­புக்கு மாறாக  எத்­த­கைய செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்ள முடி­யாது என்றும்  அவர் தெரி­வித்­தி­ருந்தார்.  அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையே  நல்­லி­ணக்­கத்தை  ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அபி­வி­ருத்தி மட்டும் போது­மா­னது  என்றும்  அவர்  கூறி­யி­ருந்தார்.

இத­னை­விட அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு  சிறந்த அமைச்சை வழங்­கி­யுள்­ளமை குறித்தும் அவர்  கருத்து தெரி­வித்தார்.  தம்­முடன்  ஒரே ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னரே இருப்­ப­தா­கவும் அவ­ருக்கு   நாடு­த­ழு­விய ரீதியில் சேவை செய்­யக்­கூ­டிய அமைச்­சினை வழங்­கி­யுள்­ள­தா­கவும்  அவர்  கூறி­யி­ருந்தார்.

தற்­போதும்   அதே நிலைப்­பாட்­டி­லேயே  ஜனா­தி­பதி  உள்­ளமை புல­னா­கின்­றது. ஐ.நா. வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போதும்  இந்த விட­யங்­க­ளையே அவர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார் . வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் பிர­தி­நிதி ஒரு­வ­ருக்கு கெள­ர­வ­மான பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  பிர­தா­ன­மான தமிழ் கட்­சியின் ஆத­ரவு இல்­லா­வி­டினும் வடக்கு, கிழக்கை  அபி­வி­ருத்தி செய்­யப்­போ­வ­தா­கவும் அவர்   கூறி­ய­தி­லி­ருந்து இந்த விடயம்  புல­னா­கின்­றது.

யுத்­தத்­தினால் பெரும் பாதிப்­புக்­களை சந்­தித்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள்  அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும்.  அதற்­கென விசேட திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது   அவ­சி­ய­மாக உள்­ளது.  யுத்­தத்தில் பேர­ழி­வு­களை சந்­தித்த இந்த மாகா­ணங்கள் இன்­னமும் முழு­மை­யாக அபி­வி­ருத்தி அடை­ய­வில்லை.  அங்கு வாழும் மக்கள்   தமது வாழ்­வா­தா­ரத்தை  கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு  இன்­னமும்   கஷ்­டப்­பட்டே வரு­கின்­றனர்.  எனவே,   பிர­தேச வேறு­பா­டுகள் இன்றி  இந்த மாகா­ணங்கள்  அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற   ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு  மிகவும் சரி­யா­ன­தாகும். அதில்  மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

இந்த மாகா­ணங்­களின் அபி­வி­ருத்தி தொடர்பில்  ஜனா­தி­பதி  அக்­கறை காண்­பித்து வரு­கின்றார்.  இதற்­கென  அந்த மாவட்­டங்­களில்   புத்­தி­ஜீ­விகள்  குழுக்­களை நிய­மிக்கும்  நட­வ­டிக்­கை­க­ளிலும் அவர்  கவனம் செலுத்தி வரு­கின்றார்,.  கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் தலை­மையில்  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை சேர்ந்த ஆயர்­களை   ஜனா­தி­பதி சந்­தித்து பேசி­யி­ருந்தார்.  இந்த சந்­திப்­பின்­போதும்  இந்த மாகா­ணங்­களின் அபி­வி­ருத்தி  தொடர்பில்   ஆரா­யப்­பட்­டுள்­ளது.  மாவட்டம் தோறும் புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைத்து   அவர்­க­ளிடம்   திட்­டங்­களைப் பெற்று அதனை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வது  தொடர்­பிலும்   கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

அதற்­கி­ணங்க தற்­போது புத்­தி­ஜீ­விகள் குழுக்­களும்  அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  இதன் தொடர்ச்­சி­யா­கவே  ஜனா­தி­பதி  எதிர்­வரும் வாரங்­களில்    வடக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வடக்கு, கிழக்கில் மக்கள் அனு­ப­விக்கும் பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும். அந்தப் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும்.  

இந்த விட­யத்தில்   ஜனா­தி­ப­தி­யினால்  முக்­கிய தமிழ் கட்சி என்று  கூறப்­பட்­டுள்ள  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும் ஒரே நிலைப்­பாட்­டி­லேயே  உள்­ளது.  அபி­வி­ருத்தி விட­யத்தில்  ஜனா­தி­ப­தியின் முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை  தயா­ரா­கவே  உள்­ளது. அண்­மையில்   இந்த விடயம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  மற்றும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ. சுமந்­திரன் ஆகி­யோரும்  கருத்­துக்­களை  தெரி­வித்­தி­ருந்­தனர்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் அபி­வி­ருத்தி தொடர்­பிலும் அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்கு  தயார் என்று  இவர்கள்  அறி­வித்­தி­ருந்­தனர்.  ஆனாலும் அபி­வி­ருத்­தி­யினால் மட்டும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்­டு­விட முடி­யாது. கடந்த பல தசாப்­தங்­க­ளாக புரை­யோ­டிப்­போயுள்ள இனப்­பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வும்  காணப்­ப­ட­வேண்டும் என்­பதே கூட்­ட­மைப்பின்  நிலைப்­பா­டாக உள்­ளது.

இந்த விட­யத்­தில்தான்  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும்  ஜனா­தி­ப­திக்­கு­மி­டையில்  முரண்­பா­டுகள்  ஏற்­ப­டு­கின்­றன.   உண்­மை­யி­லேயே  யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான வடக்கு, கிழக்கு  ஏனைய  மாகா­ணங்­களை விட   துரிதகதியில்  அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.  அதற்கான  ஜனாதிபதியின் நடவடிக்கைகள்  தொடர்ந்தும்   முன்னெடுக்கப்படவேண்டும்.  அதேவேளையில்  பேரிழப்புக்களை சந்தித்து   தமது  அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உரிமைகளைப் பெறும்  எண்ணத்தில்  உள்ள  தமிழ் மக்களுக்கு   அந்த  விடயம் தொடர்பிலும்  தீர்வு காணப்பட வேண்டியது   அவசியமாக வுள்ளது.

இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி   தனது  நிலைப்­பாட்­டி­லி­ருந்து  மாற­வேண்­டிய தேவை உள்­ளது. ஏனெனில், சிறு­பான்­மை­யின மக்­களின்   குறிப்­பாக தமிழ் மக்­களின்  மனங்­களை   வெல்ல வேண்­டு­மானால் அபி­வி­ருத்­தி­யுடன் அர­சியல்  தீர்­வுக்கும்  வழி­வகை செய்­யப்­ப­ட­வேண்டும்.   அபி­வி­ருத்­தியை மட்டும்  தமிழ் மக்கள்  எதிர்­பார்த்­தி­ருப்­பார்­க­ளானால்  கடந்த தேர்­தல்­களில் பல சலுகைகள் வழங்­கப்­பட்­ட­போது அவர்கள்  தமது நிலைப்­பாட்டை  மாற்­றி­யி­ருப்­பார்கள். ஆனால்,  யுத்­தத்­திற்குப் பின்னர் இடம்­பெற்ற ஒவ்­வொரு தேர்­தலிலும்  தமிழ் மக்கள்   தமது நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.  எனவே, இந்த விடயம் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியம்.

(24.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )