குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இருவட்டுக்களை அவர் இன்னுமும் சபையில் சமர்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்றையதினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில்  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எனக்கு இரண்டு தினங்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணை வழங்கியிருந்தால் என்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று கூடிய அமர்வின்போதும் அவர் சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை சமர்ப்பித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று இவ்வாறு அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.