பாக்கிஸ்தானில்  விராட்கோலியை விட சிறந்த வீரர்களாக மாறக்கூடிய பல வீரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களிற்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஆதரவு  கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் விராட்கோலியை விட சிறந்த வீரர்களாக மாறக்கூடிய திறமையுள்ள வீரர்கள் உள்ளனர் என நான்நம்புகின்றேன் ஆனால் எங்கள் கிரிக்கெட் அமைப்பு முறை அவ்வாறான வீரர்களை புறக்கணிக்கின்றது என அவர்தெரிவித்துள்ளார்.

விராட்கோலி தன்மீது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வைத்த நம்பிக்கையை நிருபித்துள்ளார் எனவும் ரசாக் தெரிவித்துள்ளார்

விராட்கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை அதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஆதரவு கிடைக்கப்பெற்ற அதிர்ஸ்டசாலி அவர் எனவும் அப்துல்ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒரு வீரர் வெற்றிகரமானவராக திகழ்வதற்கு அவசியமான நம்பிக்கையை விராட்கோலிக்கு வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அப்துல் ரசாக் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடமிருந்து விராட்கோலிக்கு கிடைக்கின்ற  மரியாதையே மிகச்சிறப்பாக விளையாடுவதற்கான உந்துதலை அவரிற்கு வழங்குகின்றது எனவும் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.