கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் அவசரகாலநிரலை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த 25 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த கொரோனா வைரஸானது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகள் எங்கும் பரவத் தொடங்கியுள்ளது.

 இதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவில் அவரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் சீனா தனது 10 நகரங்களின் செயற்பாடுகளை தனிமைப்படுத்தியுள்ளது.

இதேவேளை, 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனராவென அறிய வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உலகநாடுகளில் பரவியுள்ள குறித்த கொரோனா வைரஸானதும் தற்போது கொங்கொங், மக்காவு, தைவான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் குறித்த  வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக பல நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுவரை கொரோனா வைரஸினால் சீனாவில் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கொங், ஜப்பான், மக்காவு, வியட்நாம் ஆகிய நாடுகளில் தலா இரண்டு பேர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன் சிங்கப்பூர், தென்கொரியா, தாய்வான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.