மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நம்பவர் வன் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் மற்றும் ஆர்ஜன்டீனாவின் பெடெரிகோ டெல்போனிஸ் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியின்போது பெடெரிகோ அடித்த பந்துக்கு நடால் பதிலடி கொடுத்தபோது, அந்தப் பந்து தவறுதலாக பந்தை சேகரிக்கும் சிறுமியின் முகத்தை தாக்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடால் சிறுமியிடம் சென்று மன்னிப்புக் கேட்டதுடன், சிறுமியின் தொப்பியை உயர்த்தி அவரின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதானப் படுத்தினார்.

போட்டியின் பின்னர் இது தொடர்பில் பேசிய நடால், இது தன் வாழ்நாளில் எதிர்கொண்ட மோசனமான சம்பவங்களில் ஒன்று எனவும், குறித்த சிறுமி மிகவும் தைரியமானவர் எனவும் கூறினார்.

இந்தப் போட்டியில் நடால்  6-3, 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்ததுடன் அடுத்த ஆட்டத்தில் அவர் சக நாட்டு வீரரான பாப்லோ கரெனோவை சந்திக்கிறார்.