ஆராச்சிக்கட்டுவ பகுதியில் பஸ் நடத்துனரை தாக்கிய தந்தை மற்றும் அவரது மகனை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று கொழும்பிலிருந்து மன்னார் வரை சென்ற  போது பண கொடுக்கல் வாங்கலின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மன்னார்  பகுதியைச் சேர்ந்த பஸ் நடத்துனர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார். 

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.