( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

கூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கு விசேட பொறிமுறையொன்றை  உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணயினர் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கிய சம்பளத்தில் அவர் பெற்றே தந்தாகவேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினர். 

ஆளுத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று மாலை சபையில் சமர்ப்பித்திருந்தார். இந்த பிரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்  கூறுகையில், 

அரசாங்க தரப்பு இந்தப் பிரேரணையை முன்வைத்திருப்பதை வரவேற்கின்றோம். ஆனால், கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை.

மார்ச் மாதம் முதலாம் திகதிதான் 1000 ரூபா கிடைக்குமென கூறப்படும் நிரலையில்  அதனை ஜனவரி மாதமே ஏன் கூவித் திரிகின்றனர். 1000 ரூபாவுக்கு நாம் எதிர்பில்லை. ஆனால், குறைந்த பட்ச வேதனம் 1000 ரூபாவாக இருக்க வேண்டும். இந்த பிரேரணையில் 1000 ரூபா வரை சம்பள உயர்வு எனதான் கூறப்படுகிறது. பிரேரணையை முன்வைத்த அநுராத ஜயரத்ன எம்.பி. 300 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டுமென கூறினார். அதுவே சரியாது.

ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து 1000 ரூபா வழங்குவதில் அர்த்தமில்லை. எப்படியாவது 1000 ரூபா கொடுப்பதல்ல அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும். 

இதேவேளை கூட்டு ஒப்பந்த நாடகத்தை நீக்கி அரசாங்கத்தின் கீழ் சம்பள முறைமையை கொண்டுவர வேண்டுமென்பதுடன், இதற்கு முறையான அரச பொறிமுறையொன்றை ஏற்படுத்தி அரசாங்கமே நேரடியாக தலையீடு செய்யது சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.