பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, கொஸ்கம - சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால்   பாதிக்கப்பட்ட மக்களின்  வீடுகள் புனரமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களின் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை  வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

அதன் பிரகாரம், சாலாவ  வெடிப்பு சம்பவத்தில் பாதிப்படைந்த மக்களின் புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையில்  வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்கவேண்டாமென பிரதமர் திறைசேகரிக்கு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியில் பொதுமக்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரதமர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.