முஸ்லிம் தனியார் சட்டம் என்பது ஒரு சமூகத்துக்கான சட்டமாகும் :  ஐ.ம்.மன்சூர் 

Published By: R. Kalaichelvan

23 Jan, 2020 | 10:50 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்விம் தனியார் சட்டத்தை இல்லாமலாக்குவதை நியாயப்படுத்தவே மலைநாட்டு சிங்கள மக்களுக்கான கண்டிச்சட்டத்தையும் நீக்கவேண்டுமென தெரிவித்து ரத்ன தேரர் தனிநபர் பிரேரணை கொண்டுவந்திருக்கின்றார்.

கண்டிச்சட்டத்தை இல்லாமலாக்குவதை சிங்கள மக்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது ஒரு சமுகத்துக்கான சட்டமாகும். அது நடைமுறையில் இருப்பதில் யாருக்கும் பாதிப்பில்லை என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஐ.ம்.மன்சூர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தாவர, வனவிலங்கினை பாதுகாப்பு கட்டளைச்சட்ட கீழ் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனைத்து இன மக்களும் ஒன்றாக போராடியதன் மூலமே எமது நாட்டிக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம். ஆனால் சுதந்திரத்தை பெற்று 8 வருடங்களில் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் பாரிய பிரச்சினை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் பிரிவிணையை ஏற்படும் நிலைக்கு சென்றது. இதன் பின்னணியே 30வருட யுத்தத்துக்கும் வழிவகுத்தது. யுத்தத்தினால் அப்பாவி தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லில் அடங்காதவை.

அத்துடன் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமலாக்குமாறு தெரிவித்து தனி நபர் பிரேணை ஒன்றை கடந்த பாராளுமன்ற அமர்வில்  சமர்ப்பித்திருந்தார்.

அவர் சமர்ப்பித்திருக்கும் இந்த பிரேரணையை நியாயப்படுத்தும்வபையிலும் எதிர்ப்புகள் எழாமல் இருப்பதற்கும் மலைநாட்டு சிங்கள மக்களுக்கான கண்டிச்சட்டத்தையும் இல்லாமலாக்கவேண்டும் என தெரிவித்து தற்போது மேலுமொரு பிரேரணையை சமர்ப்பித்திருக்கின்றார்.

மலைநாட்டு சிங்கள மக்கள் ஏனைய பெளத்த மக்களுடன் இணைந்து செயற்படுவதால் கண்டிச்சட்த்தை இல்லாமலாக்குவது தொடர்பாக அந்த மக்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது ஒரு சமூகத்துக்குரிய சட்டமாகும்.

அந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இலலை. ஆனால் இவ்வாறான பிரேரணை அரசியல் ரீதியிலான அடைவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மக்களை குழப்புவதற்கே கொண்டுவந்திருக்கின்றது. பாராளுமன்றத்துக்கு ஒரு பிரேரணையை கொண்டுவரும்போது அது அனைத்து இன மக்களுக்கும் பிரயோசனமாக இருக்கவேண்டும். மாறாக எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் அது அமையக்கூடாது.

மேலும் ஜனாதிபதி தனது அக்கிராசன உரையின்போது இனத்துவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்றை நிராகரிப்பதுடன் அது கண்டிக்கத்தக்கது. இனத்துவ அரசியல் கட்சிகள் என்பது சாதாரணமாக வந்ததல்ல.

தனிச்சிங்கள சட்டத்தின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைச்சம்பவங்களினால் சிறுபான்மை இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட ஈர்ப்பே இதன் இதற்கான பிரதான காரணமாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32