பிடியாணை பெற்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிடியவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட நீதிபதிகளான பத்மினி ரணவக்க மற்றும் தம்மிக்க ஹேமபால ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை பரிசோதனை செய்யுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது