கரும்புலிகளை பாதுகாப்பது போன்று சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் : திலகராஜ்

Published By: R. Kalaichelvan

23 Jan, 2020 | 08:25 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கரும்புலிகளை பாதுகாப்பது போன்று பெருந்தோட்டத் தொழில்துறைக்கு கடும் அச்சுத்தலாகவுள்ள சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று நடைபெற்ற தாவர வனவிலங்கினப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

வனவிலங்குகள் பற்றி பேசும்போது அதிகமாக யானைகள் பற்றிதான் பேசப்படுகின்றன.

ஏனைய விலங்குகள் பற்றி பேசப்படுவதில்லை. சிங்கராஜா வனம் அல்லது அதனையொட்டிய பிரதேசங்களில் கரும்புலியொன்று உளாவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. கரும்புலி இனம் அரிதானதாக உள்ளது.

ஆப்பிரிக்க வனப்பகுதிகளில் காணப்படும் அந்த இனத்தை பாதுகாக்கப்பட வேண்டுமென சூழலியளார்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவற்றை பாதுகாக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

ஆனால், சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் மலையகத்தில் அதிகமாக இருக்கின்றன. இதனால் பெருந்தோட்டப் தொழிலாளர்கள் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இலங்கையில் யானைகள் பிரச்சினை உள்ளதுபோன்று பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைப் புலிகளின் பிரச்சினை அதிகமாக உள்ளன. கடந்தக் காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தை மையப்படுத்திய ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் எவ்வாறு சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது அவற்றை எவ்வாறு வாழவைப்பது என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தென்னிலங்கை மற்றும் சமவெளி பகுதிகளில் காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்கு சென்று தாக்குகின்றன. அதற்கு நடவடிக்கைகள் எடுப்பது போன்று  பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை, இறப்பர் தொழிலில் ஈடுபடும் மக்கள் காடுகளுக்குச் சென்று தொழில் செய்ய வேண்டியிருக்கின்றது.

அவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட பொருளாதாரத்தால் நாடு அடைந்த நன்மைகள் குறித்து அவதானித்து பார்க்க வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கியுள்ள பங்களிப்புதான் சுதந்திரத்துக்குப் பின்னரான நாட்டின் அனைத்து கட்டுமானங்களுக்கும் ஆதாரமாகவுள்ளன. காப்புறுதி, வங்கித்துறை, போக்குவரத்துத் துறை என அனைத்தும் பெருந்தோட்டத்துறை இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டனர்தான் எழுச்சியடைத்தன.

இந்தப் பெருந்தோட்டத் துறை சார்ந்த மக்கள்  விலங்குப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருவது தொடர்பில் எவரும் பேசுவதில்லை. தோட்டங்கள் உரிய முறையில் பராமரிப்பதில்லை என்பதால் தினமும் குளவிக் கொட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செய்தி வெளியாகின்றன. குளவி, சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கான எந்தவிதமான காப்பீடுகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை இல்லை.

விலங்கினங்களில் இருந்து பாதிப்பு ஏற்படாதவகையில் பெருந்தோட்டத் துறை நடத்திச் செல்வதென்ற பொறுப்பும் துறை சார்ந்த அமைச்சருக்கு உள்ளது.

பெருந்தோட்டத் துறைக்கு அப்பால் விவசாயத்துறையில் ஈடுபடுகின்ற நுவரெலியா மாவட்ட மக்கள் குழுமாடுகள் குரங்குகளால் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனார்.

இலங்கையில் குழுமாடுகளையும் குரங்குகளையும் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இல்லை. குழு மாடுகளே என்ற வகையே இலங்கையில் என்று கூறப்படுகின்றது. குரங்கு குழு மாடுகளால் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குரங்குஇ குழுமாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் தேவை எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53