குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான  52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் 

Published By: R. Kalaichelvan

23 Jan, 2020 | 08:14 PM
image

(ஆர்.விதுஷா)

குவைத்திற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு பல்வேறு  துன்புறுத்தல்களுக்கு உள்ளான 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜகத் படுகெதர தெரிவித்தார்.

 

அவர்கள் அனைவரும் நேற்று இரவு 10.15 மணியளவில் யூஎல்- 230 என்ற விமான சேவையூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் சகல சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியானதையடுத்து  ,இன்று அதிகாலை 6.15 மணியளவில் வேலைவாய்ப்பு  பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களது  முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் இடம் பெற்றன.

உரிய முறையில் ஊதியம் வழங்கப்படாமை , சட்டவிரோதமான  முறையில் நாட்டில் தங்கியிருந்தமை , துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை மற்றும் நாட்டின் விதிமுறைகளை மீறி  செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் காரணமாகவே, அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  

இவர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை  சேர்ந்தவர்கள் என்பதுடன், பாதிகப்பட்ட பெண்களில் சிலருக்கு தமது வீடுகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து உதவியையும் வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது. 

அதேவேளை, அவர்கள் அளித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள வேலைவாய்ப்பு பணியகம் மேலதிக  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31