சீனாவில் 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸ் தாக்குத்துக்குள்ளான ஒருவர் சிங்கப்பூரில் இனங்காணப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் மாநிலத்திலிருந்து ஒன்பது சீனப் பிரஜைகள் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர். 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின்போதே அதில் 66 வயதுடைய முதியவர் ஒருவர் கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் மொத்தம் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தில் நால்வரும் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தலா ஒவ்வொரு பேரும் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.