முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் இன்றையதினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

தென்பகுதியிலிருந்து சென்று கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராக செயற்பட்டுவந்த  மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .

குறித்த நபர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றையதினம் குறித்த வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார் . 

இந்த சடலத்தை கண்ட சக மீனவர் கிராம அலுவலரிடம் முறையிட்ட நிலையில் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு தோணி மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாஎல பகுதியை சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.