அழுத்கம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக அழுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து காரணமாக கரையோர ரயில் மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அழுத்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்கதக்கது.