(இராஜதுரை ஹஷான்)

சிரேஷ்ட  தலைவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று அரசியல் ரீதியில் பலவீனமடைந்து  கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுவது கவலைக்குரியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மக்களை அரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களே இன்று திசைத்திருப்பியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை இன்று அக்கட்சியினர் பின்பற்றவில்லை. சிரேஷ்ட தலைவர்களினால் உருவாக்கப்பட்ட இக்கட்சியின்  தனித்துவம் இன்று இல்லாதாழிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும்   அக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

அரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியினர் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவித்து மக்களின் அரசியல் ரீதியான தீர்மானங்களை திசைத்திருப்பி விட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

தனக்கு இரண்டுநாள் பிணைவழங்கினால் குரல் பதிகள் அகைத்தையும்  சமர்ப்பிப்பேன் என்று பாராளுமன் உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிணை வழங்குவது தொடர்பில் அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. தொன்றும்  கடந்த அரசாங்கம் அல்ல.

நீதித்துறையினை அரசியல்மாக்கியுள்ள  ஐக்கிய தேசிய கட்சியின்   முறையற்ற செயற்பாடுகளை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள். இடைக்கால அரசாங்கத்தில் மக்கள்  பயன்பெறும் விதத்திலான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.  என்றார்.