நாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்தில் அடைமழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் நண்பகல் 2 மணிக்கு பின் மழைபெய்யக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு பூராகவுமுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும், இதனால் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடலை அண்டி வாழ்போர் விழிப்புடன் இருக்குமாரும் வளிமண்டலவியல் திணைக்களம்  கோரிக்கை விடுத்துள்ளது.