அக்குறணை பிரதேசத்தில் ஆற்றுமணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று குடை சாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றப்பயன் படுத்தப்படும் ‘லோடர்’ என்ற சுமை ஏற்றி ஒன்றே இவ்வாறு தடம் புறண்டுள்ளது. அது தடம் புறண்டதில் சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி அக்குறணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்பிரமணியம் மேற்கொண்டார்.
தலை மற்றும் உடலின் பலபாகங்களிலும் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக அதிகளவான குருதிப் பெருக்கம் ஏற்பட்டு இம்மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை பின்னர் அவர் சாட்சியமளித்தார்.
இதையடுத்து விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM