ஸ்ரீ ஜயவர்தனபுர, வயம்ப, ருஹுனு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி பணிகளை துரிதப் படுத்துதல்.

2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் நோக்கில், ஸ்ரீ ஜயவர்தனபுர வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பௌத்த பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 13 நிர்மாண திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அடிப்படையில் 2020 – 2022 மத்திய கால வரவு செலவு கட்டமைப்புக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பணிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.