நோர்வே தூதுவரினால் கிளிநொச்சியில் சூரிய சக்தி மின் பிறப்பாக்கி திறந்து வைப்பு

Published By: J.G.Stephan

23 Jan, 2020 | 03:23 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்படவுள்ளது. 

2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரையோக விஞ்ஞான பல்கலை கழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வேயிலுள்ள பல்கலைகழகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கும் இவ் ஆய்வைf மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளது. 

சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் மின் உற்பத்தியை மேற்கொள்வது வறுமையை ஒழித்து சுகாதாரத்தை மேம்படுத்தி காலநிலை மாற்றத்தை குறைக்கிறது. இது தொடர்பில் தனியார் துறையினரின் பங்களிப்பும் முக்கியமானது என நோர்வே தூதரக இலங்கைக்கான தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் இது பற்றி கருத்து தெரிவித்தார். 

யாழ்ப்பாண பல்கலைகழகமும் நோர்வே பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குயினர் எனும் நோர்வே சக்தி வலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11