உடல் எடை அதிகரிப்பில் இரவு உணவு முக்கிய பங்களிக்கின்றது.

அந்தவகையில்,  இரவு உறங்குவதற்கு முன் நாம் உண்ணும் உணவின் அளவை குறைத்துக்கொள்ள சில இலகுவான வழிகளை கடைப்பிடிக்க சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

இரவில் உறங்கும் நேரத்தில் உண்பதையும் நீர் ஆகாரம்  அருந்துவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இரவில் சொக்லேட்டுக்களை எடுத்துக்கொள்ளக் கூடாது இதில் கபின் இருக்கிறது. 

இரவு உறங்கும் நேரங்களில் ஐஸ்கிரீம் எடுப்பதால் அதிகளவில் சீனி, கொழுப்பு இருப்பதால் மூளையை அதிகம் தூண்டுவதால் உறக்கம் குறைகிறது. 

மதுபானம் அருந்துவதால் நித்திரை பாதிக்கப்படும்.

இரவு நேரங்களில் அதிகளவு உப்பு கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது அதாவது பீட்சா, சீனி உணவுகள்  மற்றும் கறிவகைகள், செலட்  ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

இரவு உணவிற்கு போதுமான புரதம், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை எடுப்பது நல்லது அத்துடன் பாரம் குறைந்த, கொழுப்பு குறைந்த உணவுகளை எடுப்பது நல்லது. 

அத்துடன் தயிருடன் பழ சலட் உட்கொள்வது உடலுக்கு நன்மை தரும். 

நீங்கள் இரவு உணவை உட்கொண்டு விட்டு வயிறு நிரம்பி விட்டது என நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் மனம் தான் உங்களை கட்டுப்படுத்தும்.

இவ்வாறு நல்ல உணவுகளை  உட்கொள்வதால் நோய்வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.