சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலினால் 50 ஜிஹகாதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில், பல போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாக, இட்லிப் மாகாணத்தில் போராளிகளுக்கு எதிராக டமாஸ்கஸ் (சிரியாவின் தலைநகர்) தனது இராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளதாக சிரிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.