( ஜே.எம்.ஹாபீஸ் )

கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை உட்செலுத்த முயன்றபோதே அது வெடித்ததில் 16 வயது சிறுவன் காயமடைந்து  கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, கரங்கஹதென்ன, கம்மடுவ பகுதியில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 

மேற்படி சிறுவன், கட்டுத்துவக்கை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாட முயன்றுள்ளான். அதற்காக, கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை உட்செலுத்த முயன்றபோது துவக்கு வெடித்துள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.