பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதின் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் - தலை மன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிகளை தயார் செய்து கையக்கப்படுத்திக்கொண்டதாக கூறப்படும்  சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில்,  வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ரிப்கான் பதியுதீனைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில் சி.ஐ.டி.யினர் அவரை கைதுசெய்ய தொடர்ச்சியாக தேடுதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகினார்.

இதன்போதே அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.