வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி நேற்று 22.01 காலை 6 மணி முதல் பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தரும் வரை குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் இன்று நகரில் குப்பைகளை அகற்றாமல் உள்ளதுடன் நேற்று அள்ளப்பட்ட குப்பைகள் குப்பை ஏற்றும் வாகனங்களில் நகரசபையில் தரித்துள்ளது.
இதனால் நகர்ப்பகுதியில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்ற நிலையில் இன்று நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM