அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபெருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர் 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் குறித்த வீடு ஒன்றினை சம்பவதினமான நேற்று மாவை 5.45 மணியளவில் அம்பாறை விசேட பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

 இதன்போது வீட்டின் காணிப்பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5.5. எம் எம். தோட்டா 52.  7.5. எம். ஏம். தோட்டா 12 , ஈயம் போல்ஸ், 1 கிலோ 40 கிராம் வெடிமருந்து, டெடனேட்டர் உப்பட வெடிபொருட்கள் மீட்டுள்ளனர். 

இதனையடுத்து சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.