யாழ் - பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவபீட மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்த 29 வயதுடைய திருமணமான மாணவி நேற்று (22.01.2020) மதியம் அவரின் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

மேற்படி கொலை குடும்ப தகராறு காரணமாக 30 வயதுடைய அவரது கணவரால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பரந்தன் இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த கொலை இடம்பெறும்போது, அருகில் இருந்தவர்கள் கூறியதாவது, 

குறித்த பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசுவது வழக்கமானதெனவும், அவ்வாறு இவர்கள் பேசுக்கொண்டிருக்கையில்,  இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை இருப்பதை அறியமுடிந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர், குறித்தப்பெண்ணின் கதறல் சத்தம் கேட்டுள்ளது. ஓடி சென்று பார்த்தபோது, குறித்த கொலையாளி, அப்பெண்ணை கத்தியால் குத்தி, கடலில் தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில், குறித்த கொலையாளியை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிபிடித்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.