இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம் நடந்தேறியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் வசிக்கும் 16 வயதான முகமது இதுல் என்ற சிறுவர் தனது குடும்பத்துடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் மீன் பிடித்து கொண்டிருக்கையில், திடீரென்று ஊசி மீன் வகையைச் சேர்ந்த பெரிய மீன் ஒன்று முகமது இதுலின் கழுத்தின் மீது குத்திப் பாய்ந்துள்ளது.மேலும் அம்மீனின் வாய் மிகவும் கூர்மையாக இருக்கும். மேலும் இந்த வகை மீன்கள் தண்ணீரில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த கூடியதென்பதும் விசித்திரமானதொன்றே.

சிறுவனின் கழுத்தில் மீன் பாய்ந்ததில், அந்த மீன் சிறுவனின் கழுத்தை ஊடுறுவி மறுபக்கத்தில் வெளியே வந்துள்ளது. இதை பார்த்த அந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக கதறியபடியே சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு தொடர்ந்து 2 மணி நேரம் போராடிய வைத்தியர்கள் சிறுவனின் கழுத்தில் சிக்கிய மீனை அகற்றினர். ஆனால் அந்த சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறுவனுக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக அ்நநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது .

(மெய்ல் ஒன்லைன்)