சீனாவின் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி சீனாவின் 25 மாகாணங்களிலேயே இந்த 581 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது :
* 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
* 17 பேர் 'hubei' மாகாணத்தில் உயிரிழப்பு
* 5,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
* 4,928 பேர் வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளனர்.
* 969 பேர் வைத்திய பரிசோதனையின் பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
* 95 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்