குர்திஷ் அகதிகள் 10,000 பேரை இங்கிலாந்திற்கு கடத்திய குற்றச்சாட்டில் 23 பேரை ஐரோப்பிய கடல் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின்  குற்றவியல் நீதி ஒத்துழைப்பு நிறுவனமான யூரோஸ்ட்  இதை தெரிவித்துள்ளது.

மேலும் அந் நிறுவனம் தெரிவிக்கையில்,

நேற்று பிரான்சில் 19 பேரையும் , நெதர்லாந்தில் 4 பேரையும் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்ப்பட்டதாக தெரிவித்தது.

அத்தோடு மிக நீண்டகால நடவடிக்கையின் பின் ஆழ் கடத்தல் சம்பவம் தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் குறித்த பிராந்தியத்தில் ஐந்து வளாகங்கள் பிரிக்கப்பட்டு பிடையினரின் உதவியுடன் தேடுதலை நடத்தியது.

இந்நிலையிலேயே 10,000 குர்திஷ் அகதிகள் கடத்தப்பட்டு பிரான்சில் இருந்து குளிரூட்டப்பட்ட லொறிகள் , சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்துக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

கடத்தலில் ஈடுப்ட்ட 23 பேரில் இருவர் தெரிவித்துள்ளதாவது,

நெதர்லாந்து மற்றும் பிரான்சை இலக்காக கொண்டு அகதிளாக வெளியேறியவர்களை அதிகமாக கடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு , இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு அந்நாட்டு கடல் எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.