வவுனியா தாண்டிக்குளத்தில் கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனம்  குடைசாய்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி கோழி தீவனத்தை  ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏ 9 வீதியைக் குறுக்கிட்ட கால்நடையால் வாகனம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் இந்நிலையில், கால்நடை ஒன்று உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.