விவசாய இராஜாங்க அமைச்சு பத்தரமுல்லையில் உள்ள கொவிஜனமந்திரயவிற்கு மாற்றம் செய்யப்பட்டவுள்ளது.

இராஜகிரியாவில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தற்போது இயங்கிவரும் விவசாய ராஜாங்க அமைச்சு இம் மாதம் 31 ஆம் திகதி முதல் பத்திரமுல்லையிலுள்ள கொவிஜனமந்திரயவிற்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இராஜகிரியவில் இயங்கிவரும் தற்போதைய கட்டிடத்திற்காக விவசாய இராஜாங்க அமைச்சு மாதந்தோறும் இரண்டரை மில்லியன் ரூபாவை வாடகையாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த அமைச்சு பத்தரமுல்லையிலுள்ள கொவிஜனமந்திரயவுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதால் அரசாங்கத்திற்கு செலவுகள் மிகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.