அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

வொஷிங்டனின் சியாட்டல் என்ற நகரிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந் நாட்டு நேரப்படி புதன்கிழ‍ை  இரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த 42 மணி நேரத்தில் குறித்த பகுதியில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டு சந்தேக நபரகளை பொலிஸார் தேடி வருவதாக 'KOMO' என்ற செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் காயமடைந்த அனைவரும் ஹார்பர்வியூவில் உள்ள வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.