ஐந்து கிலோ தங்கத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்தும் மீட்கப்பட்ட 5 கிலோ தங்கத்தின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபாவிற்கு அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமானத்தில் வைத்துகைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.